நயன்தாரா கால்ஷூட் வேணுமா? : அந்த கதையோட மட்டும் போயிடாதீங்க…
இன்னும் எத்தனை மாதங்கள் தமிழ்சினிமாவை பேய்களும், பிசாசுகளும் ஆட்டிப்படைக்குமோ என்று புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது அந்த புலம்பல் சத்தத்தை சன்னமாக்கி விட்டார்கள்.
அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.
பேய் பட சீஸன் ஆரம்பித்தபோது புதுமுக நடிகைகளே பேய்களாக பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். படங்களும் நன்றாக கல்லா கட்டியதால் இப்போது த்ரிஷா, ஹன்சிகா, லட்சுமிராய், நயன் தாரா போன்ற முன்னணி நடிகைகளே பேய்க் கதைகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அபிமான நடிகைகள் பேயாக வந்தாலும் ரசிக்கும் ரசிகர்களால் படங்களில் வசூலை அள்ளிக் குவிக்கின்றன.
அதிலும் பேய்க் கதைகளில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதத்தில் இருந்த நயன்தாரா ‘மாயா’ படத்தில் நடித்தாலும் நடித்தார் படமும் ஹிட், வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
அதன்பிறகு பல டைரக்டர்கள் கையில் பேய்க்கதைகளை வைத்துக் கொண்டு நயனிடம் கதை சொல்ல வர, டோட்டலாக அப்செட்டாகி விட்டாராம் நயன்.
எல்லாமே ஒரே மாதிரியான கதைகளாக இருப்பதால் எங்கே நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தன்னுடைய மார்க்கெட் இதனாலேயே டவுணாகி விடுமோ? என்று பயந்தவர் கொஞ்ச காலத்துக்கு பேய்க்கதைகளில் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறாராம்.
பேய்க்கதைகளை தவிர மற்ற வித்தியாசமாக கதைகளோடு வரும் இயக்குநர்களுக்கு மட்டுமே கால்ஷுட் கொடுப்பது என்றும் உறுதி எடுத்திருக்கிறார்.
ஆகவே இயக்குநர்களே..? நயன்தாரா கால்ஷூட் வேணும்னா பேய்க் கதையோட மட்டும் பக்கத்துல போயிடாதீங்க…?