லாரன்ஸ் போட்ட பிட்டு : கவிழ்ந்தார் நயன்தாரா

Get real time updates directly on you device, subscribe now.

Nayanthara

நயன்தாராவுக்கு கொஞ்சமல்ல ரொம்பவே இளகிய மனசு.

அதனால் தான் சிம்பு தன்னை காதலித்த காலத்தில் அவ்வளவு தூரத்துக்கு டார்ச்சர்கள் செய்த போதும் அதையெல்லாம் மனசில் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் நடிக்கக் கூப்பிட்டதும் அவரோடு ‘இது நம்ம ஆளு’ படத்தில் சேர்ந்து நடித்தார்.

அந்த இளகிய மனசு எப்படியோ லாரன்சுக்கும் தெரிந்து விட, லேசாக ஒரு பிட்டைப் போட்டு குறைந்த சம்பளத்துக்கு தனது புதுப்படத்தில் நயனை நாயகியாக கமிட் செய்திருக்கிறாராம்.

Related Posts
1 of 49

முன்னதாக அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்த நடத்திய போது தான் செய்து வரும் சமூக சேவைகள் பற்றிய விபரங்களையும் இடைஇடையே சொருகி விட, லாரன்ஸின் உதவி செய்யும் குணத்தைப் பார்த்து ரொம்பவே வியந்து விட்டாராம் நயன்.

அந்த ஒரு காரணத்துக்காகவே உங்களோடு சேர்ந்து நடிக்கிறேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் சம்பளத்தையும் கணிசமாக குறைத்துக் கொள்கிறேன் என்று சலுகை கொடுத்திருக்கிறாராம்.

எங்க தட்டினா கவுழுவாங்கன்னு லாரன்ஸ்க்கு தெரியாதா என்ன? கெட்ட பையன் சார் இந்த லாரன்ஸ்!