’NC22’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
1 of 13

கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ’மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். இவர்கள் இருவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பதோடு, படத்திற்கும் முக்கிய பலமாக இருக்கும். இந்த போஸ்டரில் நாகசைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு லுக்கும் வெளியாகவில்லை. நாகசைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க அவரை நோக்கி பல ரெட் டார்கெட்டுகள் இருக்கும்படி கருப்பு- சிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படத்தின் முக்கிய அப்டேட்டாக நாளையில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது என படக்குழு அறிவித்திருக்கிறது.

#NC22