‘தனி ஒருவன்’ தந்த தெம்பு : டைரக்டர் ஆகிறார் அரவிந்த்சாமி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்த்தான இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ- எண்ட்ரி போட்டார் அரவிந்த் சாமி. படம் சரியாகப் போகவில்லை என்றாலும் கவலைப்படாதவர் தனது பிசினஸை கவனிக்கப் போய் விட்டார்.
மீண்டும் அவரை தனி ஒருவன் படத்தில் வில்லனாக்கினார் இயக்குநர் மோகன் ராஜா. சென்ற ஆண்டு ரிலீசான படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது தனி ஒருவன்.
படத்தில் ஜெயம் ரவியை விட வில்லனாக வந்த அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் இயக்குநர் பாலா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் அரவிந்த் சாமியை தங்கள் படங்களில் கமிட் செய்து வருகிறார்கள்.
அதே சமயம் அரவிந்த் சாமியோ வருகிற வாய்ப்புகளை எல்லாம் வாரிப்போடாமல் நல்ல கதையம்சமுள்ள தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கே கால்ஷீட் கொடுத்து வருகிறார்.
அப்படித்தான் ஹிந்தியில் DEAR DADDY என்ற படத்திலும் நடித்தார்.
இப்படி புதுப்பட வாய்ப்புகள் தேடி வந்து அரவிந்த் சாமியின் ரீ-எண்ட்ரிக்கு வலு சேர்த்தாலும் அவருக்கு இயக்குநர் ஆகும் ஆசை இப்போது வந்திருக்கிறதாம்.
இன்னொரு ஒரு வருடத்துக்குள் நான் இயக்குநர் ஆவேன் என்று கூறியிருக்கிறார் அரவிந்த் சாமி.
இதற்காக தன்னிடம் இருக்கும் இரண்டு கதைகளை மெருகேற்றும் வேலையில் இறங்கியிருக்கும் அரவிந்த் சாமி தனி ஒருவன் மாதிரியான வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் வரும் கதைகளில் மட்டும் தொடர்ந்து நடிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறார்.