சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 12

‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.