”கர்நாடகாவிற்கே காவேரி சொந்தம்” : சுஹாசினி அப்படி பேசவே இல்லையாம்!

Get real time updates directly on you device, subscribe now.

suhasini1

மனசுல பட்டதை வெளிப்படையாகப் பேசுவது தைரியம் தான் என்றாலும் சில நேரங்களில் எந்த மாதிரியான விவகாரங்களில் கருத்து சொல்வது என்பது மிகவும் முக்கியம்.

அப்படித்தான் காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றமே கொஞ்சமாவது மனுஷத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் என்று கர்நாடக அரசின் உச்சிமண்டையில் நங்கென்று கொட்டியிருக்கிறது.

இதனால் வேறு வழியின்றி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட்டிருக்கிறது. இதை எதிர்த்து கன்னட அமைப்பினர் கடந்த சில தினங்களாக தமிழகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு கன்னட நடிகர், நடிகைகளும் தமிழகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கர்நாடகாவிற்கே காவேரி சொந்தம் என்று நம்மூர் நடிகை சுஹாசினி கூறியதாக வாட்ஸ் அப்பில் வேகமாக செய்திகள் பரவியது.

சுஹாசினி ஏன் இப்படிப் பேசினார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்க விஷயத்தைக் கேள்விப்பட்ட சுஹாசினி இப்போது நான் அப்படி பேசவே இல்லை என்று பல்டியடித்திருக்கிறார்.

”ஓர் அரசியல் விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் சுஹாசினி.

கருத்து சொன்னீங்களோ இல்லையோ? சோறு போடுற விவசாயிக்கு துரோகம் செய்யாம இருந்தா சரிதான்!