விஜய் பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

Get real time updates directly on you device, subscribe now.

Ajith1

விஜய்யை வைத்து ‘ஜில்லா’ படத்தை இயக்கிய நேசனுக்கு அதன்பிறகு புதுப்பட வாய்ப்புகள் தமிழில் எதுவும் அமையவில்லை.

அவருக்கு தான் அமையவில்லையே தவிர, அவருடைய உதவியாளர்கள் ஒவ்வொருவராக புதுப்படங்களில் கமிட்டாகி இயக்குநராகி வருகின்றனர்.

‘ஜில்லா’ தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், அது தெலுங்கில் சக்கை போடு போடுமென்று கருதியதால் தெலுங்கில் ரீமேக் செய்ய நினைத்தார்.

ஆனால் அந்தக் கதையில் எந்த முன்னணி ஹீரோவும் நடிக்க முன் வராததால். ரீமேக் செய்யும் எண்ணத்தை விட்டு விட்டு டப் செய்து வெளியிட்டனர்.

Related Posts
1 of 54

அப்படியில் நேசனுக்கு புதுப்படம் கிடைத்தபாடில்லை.

சோகமே உருவாக காட்சியளித்தவருக்கு இப்போது அஜித் மூலமாக ஒரு வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

ஆமாம், அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் தயாரிக்க ஏ.எம்.ரத்னம் திட்டமிட்டுள்ளார். இந்த ரீமேக்கை தெலுங்கில் இயக்கும் வாய்ப்பு நேசனுக்கு தேடி வந்திருக்கிறது. அஜித்துடன் ரீமேக் பற்றிப் பேசியதில் அவர் தான் நேசன் தெலுங்கு ரீமேக்குக்கு பொருத்தமாக இருப்பார் என்று ரெகமெண்ட் செய்தாராம்.

தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தால் தெலுங்கில் அந்தப் படத்தை இயக்கினாலும் இயக்குவார் நேசன்.

நல்லதே நடக்கட்டும்!