சிவகார்த்திகேயனை அப்செட்டாக்கிய ‘மிஸ்டர் லோக்கல்’
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’.
முன்னதாக இப்படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு திடீரென்று இப்படம் மே 17-ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ஆகிய காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படி நான்கு காமெடி நடிகர்கள் நடித்திருந்தும் படத்தில் துளியும் காமெடி என்பதே இல்லையாம். முழுமையாக தயாரான இப்படத்தை சமீபத்தில் போட்டுப் பார்த்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தாராம்.
இதனால் படத்தில் சில இடங்களில் காமெடியை சேர்க்க சொல்லி சிவகார்த்திகேயன் கேட்டதன் பேரில் தற்போது படத்தின் ரீ-ஷூட் நடந்து வருகிறதாம். அதனால் தான் படத்தின் ரிலீஸ் தேதியும் இரண்டு வாரங்கள் தள்ளிபோய் உள்ளதாம்.