ச்ச்சே… சூரி அண்ணனுக்கு சான்ஸ் இல்லையே? : சிவகார்த்திகேயன் கவலை

Get real time updates directly on you device, subscribe now.

soori

ல்ல டைமிங் சென்ஸ் உள்ள ஹீரோவை தமிழ்சினிமாவில் பார்ப்பது அரிதிலும் அரிதாக இருந்த போது தான் வந்து சேர்ந்தார் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவி கொடுத்த பப்ளிசிட்டியால் சின்னத்திரை வட்டாரத்திலேயே பெரிய அளவுக்கு ரசிகர் வட்டத்தை தனக்கு வைத்திருந்தவர் அதை வைத்தே பெரிய திரையில் மிக குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கு வந்து விட்டார்.

ஹீரோவுக்கு அளவுகோலையும் தாண்டி யதார்த்தமான காமெடி கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதோடு அவருடைய

கேடி ரங்கா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் சூரியுடன் அவர் போட்ட காம்போ காமெடி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் படங்களும் நல்ல வசூலைத் தந்தன.

இப்படி ஹிட் காமெடி காம்போவாக இருந்த சிவகார்த்திகேயனும், சூரியும் ரெமோ படத்தில் இணையாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

Related Posts
1 of 38

ஆமாம், இதில் சூரிக்குப் பதில் சதீஷ் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார்.

சரி சூரி ஏன் இந்தப் படத்தில் இல்லை?

“சூரி அண்ணன் மிகப்பெரிய காமெடி நடிகர். அவருக்கு தீனி போடும் அளவுக்கு ரெமோ படத்தில் கேரக்டர் அமையவில்லை. அதனால் தான் அவர் இந்தப்படத்தில் என்னோடு சேர்ந்து நடிக்கவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான்.

ஆனால், அடுத்து பொன்ராம் அண்ணன் இயக்கப்போகும் புதுப்படத்தில் மீண்டும் சூரி அண்ணனுடன் நடிக்கிறேன்” என்கிறார் சிவகார்த்திகேயன்.

அப்புறம் என்னப்பா சந்தோஷம் தானே?