வேதாளம்’ டைட்டிலில் புதைந்திருக்கும் ரகசியங்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

ajith

ப்படியெல்லாம் கூட படத்துக்கு பப்ளிசிட்டி செய்யலாம் என்கிற வித்தையை ஆரம்பித்து வைத்ததே அஜித் தான்.

ஒரு படத்துக்கு டைட்டில் வைக்க நேரமில்லை. படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டார்கள். ரசிகர்கள் எல்லோரும் அவரது பட எண்ணிக்கையை கணக்கில் எடுத்து ட்விட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

‘தல’ என்று ஆரம்பித்து இதோ வேதாளம் டைட்டில் வெளியாகும் வரை ‘தல 56’ என்றே ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.

ஏற்கனவே இரண்டு தடவைகள் டைட்டில் அறிவிக்கும் தேதி முடிவு செய்யப்பட்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்து எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில் தான் நேற்று மாலையில் இன்றிரவு அஜித் பட டைட்டில் அறிவிக்கப்படும் என்று உறுதியான செய்தி வெளியானது.

வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு உகந்த நாள் என்பதாலும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், ஹீரோ அஜித்தும் தீவிர சாய்பாபா பக்தர்கள் என்பதாலும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ‘வேதாளம்’ டைட்டில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து பூரித்துப் போன ரசிகர்கள் ‘ரெட் அஜித் கம்பேக்’ என்று ட்விட்டரில் விடிய விடிய வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

படத்தில் அஜித் மொட்டை கெட்டப்பில் வருகிற கேரக்டர் பெயர் தான் வேதாளம். அந்த சீக்ரெட்டை சொல்லும் விதமாகத்தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

மொட்டைத் தலை, காதில் கடுக்கன், கையில் காப்பு, கழுத்தில் சங்கிலி என அந்த கேரக்டர் கம்பீரமான தாதா கேரக்டர். அதன் வீரியத்தை டைட்டிலேயே காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்துக்கு ‘வேதாளம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

வழக்கமான அஜித் படங்களில் மாஸ் ஓப்பனிங் சாங்க் இருப்பதைப் போல இந்தப் படத்திலும் தெறி மாஸ் பாடல் ஒன்றை போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இன்னொரு செய்தியாக படம் தீபாவளிக்கு வருமோ வராதோ என்கிற சந்தேகத்துக்கும் பர்ஸ்ட் லுக்கிலேயே தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விட்டார்கள்.

ஆக அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளியும் ‘தல’ தீபாவளி தான்!