நூறுசாமி- விமர்சனம்

அம்மாவிற்கு மறுமணம் முடித்து வைக்க இரு மகன்கள் எடுக்கும் முயற்சியே படத்தின் கதை
இயக்குநர் சசி தமிழ் சினிமாவில் கவனித்தக்க இயக்குநர். அவரின் திரைமொழியில் ஆழமும் அடர்த்தியும் இருக்கும். இந்தப்படத்தின் கதையை ஒரு சிறுகதையிலிருந்தும், ஒரு உண்மைச் சம்பவத்திலிருந்தும் எடுத்தாண்டுள்ளார். விதவையான ஸ்வாசிகாவிற்கு இரு மகன்கள். மிகவும் பிற்போக்குச் சிந்தனைகொண்ட கிராமத்தில் வாழும் அவருக்கு விதவை என்பதால் ஆண்கள் மூலம் பல இன்னல்கள் வருகின்றன. அதைத்தாண்டி அவர் தானொரு மறுமணம் முடித்தால் என்ன என்ற எண்ணத்திற்கு வருகிறார். முதலில் மகன்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன்பின் ஆதரவை தெரிவிக்கிறார்கள். ஸ்வாசிகாவின் மறுமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை
படத்தில் ஸ்வாசிகாவாக இல்லாமல் செல்வியாகவே வாழ்ந்துள்ளார் ஸ்வாசிகா. இந்த வருடம் நிறைய விருதுகள் காத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி தான் வரும் 20 நிமிடங்களிலும் கவனம் ஈர்க்க முயற்சித்துள்ளார். அஜய் இன்னுமே நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். மற்றொரு மகனாக வரும் இளைஞரும் பரவாயில்லை. பாலாஜி சக்திவேல், பாடினிகுமார், கருணாஸ் உள்ளிட்ட பிற கேரக்டர்கள் தங்களின் அளவறிந்து நடித்துள்ளனர்
பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசை படத்திற்கு பெரியளவில் உதவி செய்துள்ளது. தர்ஷன் சிறந்த முறையில் ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார்
பெண்களின் வாழ்வை முடிவு செய்யவேண்டியது பெண்கள் தானேயொழி ஆண்களோ சமூகமோ அல்ல என்பதை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் சசி. சில சமரசங்கள் இருந்தாலும் கருத்தியலாக நல்லபடம்
3.5.5