ஓ பட்டர்ஃப்ளே- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு காதல் படத்தில் திரில்லரைச் சேர்த்து மிரட்ட முயன்றுள்ளார் இயக்குநர் விஜய் ரங்கநாதன்

ஹீரோ அதுல் நிவேதிதா இருவரும் கணவன் மனைவி. நிவேதிதாவிற்கு ஒரு முன்னாள் காதலன் உண்டு. அதைக்கணவனிடம் தெரியப்படுத்த நினைக்கிறார். அதற்கான வாய்ப்பை வழங்காத கணவன் அதுல், நிவேதிதா எதிர்பாராத ஒரு சுபயோக சுபதினத்தில் அதுல் நிவேதிதாவின் காதலனையே வீட்டுக்குள் அழைத்து வருகிறார். இவன் என் நண்பன் என நிவேதிதாவிடம் அறிமுகம் செய்கிறார். நிவேதிதா ஷாக்காகிறார். அதன்பின் நடக்கும் அதிரிபுதிரி சம்பவங்கள் தான் படத்தின் கதை

அதுல் குறைகள் பெரிதாக காணமுடியாதபடி நடித்துள்ளார். சிபி சந்திரன் கேஷுவலான நடிப்பை கொடுத்துள்ளார். எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அவரின் உடல்மொழி அந்தக் கேரக்டருக்கு அவரைப்பொருத்தமானவராக காட்டுகிறது. நாசர், லெட்சுமி, கீதா கைலாசம் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்

வைசாக் சோமநாத் படத்திற்குத் தேவையான இசையை வழங்கியுள்ளார். வேதராமன் சங்கரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட இல்லாத பிரமாதம். புவனேஷ் மணிவண்ணன் நல்ல எடிட்டிங்கை கொடுத்துள்ளார்

படத்தின் தலைப்பு பட்டர்ப்ளே என்று வைத்ததிற்காக என்றில்லாமல் கதையோடே வண்னத்துப்பூச்சியை கொண்டுவந்தது ஸ்மார்ட் மூவ். நல்ல நல்ல எமோட் செய்யும் சீக்வென்ஸை ரைட்டிங்கில் கொண்டு வந்து, சரியாக ஸ்டேட்ஜிங் செய்திருந்தால் ஒரு திருப்தியான படம் கிடைத்திருக்கும். ஜஸ்ட் மிஸ்
2.75/5