ZEE5-ல் மார்ச் 13ல் ஸ்ட்ரீமாகிறது ‘பூக்கி’ !

Get real time updates directly on you device, subscribe now.

ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.