Oh my dog- விமர்சனம்
நாய்குட்டியை கான்செப்டாக எடுத்துக் கொண்டால் அனைவரும் குழந்தை குட்டியோடு திரை முன் அமர்ந்து விடுவார்கள் என்ற கமர்சியல் கணக்கில் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்! கணக்குச் சரியாக இருக்கிறதா?
ஊட்டியில் நடக்கும் டாக் போட்டிகளில் வருடாவருடம் மெடலைத் தட்டுகிறார் வினய். அதற்காக பெரியளவில் நாய்களை வளர்த்து டிரைனிங் கொடுத்து வரும் அவர், கண் பார்வையில்லாத ஒரு நாயை கொலைச் செய்யச் சொல்லி தன் வேஸ்ட் அல்லக்கைகளிடம் அசைன்மென்டை கொடுக்கிறார். அவர்கள் நாய்குட்டியை கொல்வதில் சொதப்ப, அந்நாய்குட்டி மிடில்க்ளாஸ் லைஃபில் ஜீவனத்தை கஷ்டப்பட்டு நடத்தும் அருண் விஜய் குடும்பத்தில் ஒருவராக நுழைகிறது. ஆர்னவ் அந்த நாய்குட்டியோடு அடாப்ட் ஆக, அடுத்தடுத்து சில பிரச்சனைகள் நடக்கின்றன..ஒரு கட்டத்தில் வினய்யால் கொலைச் செய்யப்பட விருந்த அந்த நாய் வினய்க்கு எதிராக டாக் போட்டியில் நிற்க, முடிவு என்ன? என்பதே Oh my dog படத்தின் கதை
தாத்தா அப்பா மகன் என விஜயகுமார், அருண்விஜய், ஆர்னவ் விஜய் நடித்திருக்கிறார்கள். விஜயகுமாரின் குரலில் இருக்கும் கர்ஜனை மிகுந்த கம்பீரம் இப்படத்தில் மிஸ் ஆனாலும் தாத்தா என்பதால் ஓகே ரகம். அருண் விஜய் தன் இடத்தை மொத்தமும் மகனுக்கே வழங்கி இருந்தாலும், ஒருசில எமோஷ்னல் காட்சிகளில் இயல்பாக நடித்து இருக்கிறார். ஆர்னவ் புதுவரவு முதல் வரவு என்பதால் குறைகளை விட்டுவிடலாம். குட்டிநாயோடு உள்ள காட்சிகளிலும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் ஆர்னவ் விஜய் கவனிக்க வைக்கிறார். படத்திற்கு பெரும் வினையே வில்லன் வினய் தான். துளியும் எதார்த்தம் இல்லாத நடிப்பால் கடுப்பேற்றுகிறார்.
ஒளிப்பதிவாளர் ஊட்டியை அதன் அழகு கெடாமல் காட்டியிருக்கிறார். திரைக்கதையில் இல்லாத டெம்போவை இசையில் சரிகட்டியிருக்கிறார் இசைஞர். இன்னும் 15 நிமிடங்கள் படத்தின் நீளத்தைக் குறைக்கலாம்
நாய்களை வைத்து நடத்தும் க்ளைமாக்ஸ் போட்டியில் ஒரு அதிர்வும் சுவாரஸ்யமும் இல்லை. மிக எளிதாக யூகிக்கக் கூடிய திரைக்கதையும் படத்தின் பெரிய மைனஸ். கன்டென்ட் & Making-ல் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் Oh my dog கவனம் பெற்றிருக்கும். இருப்பினும் குழந்தைகளை கவரும் சில விசயங்கள் படத்தில் இருப்பதால் ஒருமுறை பார்க்கலாம்
2.5/5