ரா ரா- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தந்திருக்கும் மற்றொரு தரமான படம் ராரா.நாயகன் மிதுன் மாணிக்கத்தை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியனுக்கு திருமண சீதனமாக 2 காளை மாடுகளை கொடுக்கிறார் அவரது தந்தை. அந்த மாடுகளை குழந்தைகள் போல் வளர்க்கிறது அந்த இளம் ஜோடி. மாடுகள் மீது பெரும் நேசம் கொள்கிறார் மிதுன் மாணிக்கம். அவர் அப்படி பார்த்து பார்த்து கவனிக்கும் மாடுகள் ஒரு கட்டத்தில் காணாமல் போக, அதிர்ச்சியாகும் நாயகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதே கதை

அறிமுகம் புதுமுகம் என்ற பிசிறு எங்குமே தெரியாமல் அசத்தி இருக்கிறார் மிதுன் மாணிக்கம். நல்ல தேர்வு வாழ்த்துகள். அவரைப் போலவே சிறப்பான நடிப்பை வழங்கி கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார் ரம்யாபாண்டியன். படத்தின் மிக முக்கிய கேரக்டரில் அசரடித்திருக்கிறார் வாணிபோஜன். மீடியாக்காரரின் சாதுர்யம் அவரது கேரக்டரில் மிளிர்கிறது. ஏனைய கதாப்பாத்திரங்கள் எல்லாருமே கவனிக்க வைக்கிறார்கள்.

Related Posts
1 of 7

படத்தின் விறுவிறுப்பை கூட்டுவது கிருஷின் பின்னணி இசை & பாடல்கள் என்றால், படத்தின் அழகியலை கூட்டுவது சுகுமாரின் கேமரா. படத்தொகுப்பும் சலிக்கவில்லை.படத்தின் ஆகப்பெரும் பலமே திரைக்கதை தான். நாம் சாதாரணமாக கடந்து போகும் விசயத்தில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது திரைக்கதை. வெல்டன் சிறுசிறு குறைகள் இருந்தாலும் இப்படியான சிறிய படங்களில் நிறைய நிறைகள் இருப்பதை தானே பார்க்க வேண்டும். ரா.ரா வை அவசியம் பார்க்கலாம்
4/5