ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்- விமர்சனம்
2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு துப்பாக்கி ஷுட்-ஐ மையமாக வைத்து திரைக்கதை செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகன்.
காதல் மனைவியின், மருத்துவச் செலவிற்காக துப்பாக்கியை கையில் ஏந்தத்துணிகிறார் பரத். தன் திருநங்கை மகளுக்காக துப்பாக்கியை எடுக்கிறார் அபிராமி. புகுந்த வீட்டிற்குள் தனக்கு நேர்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை காரணமாக துப்பாக்கியை கையில் எடுக்கிறார் அஞ்சலி நாயர், சாதிவெறியை காப்பாற்ற துப்பாக்கியின் துணை தேடுகிறார் தலைவாசல் விஜய். இந்த நான்கு கதைகளிலும் ஒரே துப்பாக்கி தான் பயணிக்கிறது. அது எப்படி? ஏன்? என்ற கேள்வியே படமாகியுள்ளது
பரத் அபிராமி இருவரும் தங்களது அத்தியாயங்களை சிறப்பாக நடித்து காப்பாற்றுகிறார்கள். தலைவாசல் விஜய் கதையில் வரும், பவித்ரா லெட்சுமி, ஷான் இருவருமே இயல்பாக நடித்துள்ளனர். திருநங்கை தீக்ஷா சிறப்பாக நடித்துள்ளார். அஞ்சலில் நாயர் இப்படியொரு கேரக்டரை துணிச்சலாக ஏற்று அசத்தியுள்ளார். பி.ஜி.எஸ், ராஜாஜி உள்பட சிறுசிறு கேரக்டர்களும் படத்தைக் கவனிக்க வைக்கிறார்கள்
கண்ணன் & காளிதாஸ் இருவரும் சிறிய பட்ஜெட் படம் என்ற தொனி தெரியாதபடி ஒளிப்பதிவைச் செய்துள்ளனர். ஜோஸ் பிராங்க்ளின் பாடல்கள் பின்னணி இசை இரண்டையுமே சரியாகச் செய்துள்ளார். சிக்கலான கதையை தன் எடிட்டிங்கால் கரை சேர்த்துள்ளார் எடிட்டர் ஜான் லோகேஷ்
ஒவ்வொரு கதைக்கும் ஒரு துவக்கம் முடிவு க்ளீராக இருந்தாலும்,படமாக்கலில் இன்னும் கவனம் சேர்த்திருக்கலாம். படமெங்கும் சமூகநீதி, மூன்றாம் பாலினம் சார்ந்த அக்கறை பேசப்பட்டுள்ளது. அதற்காகவே சில குறைகள் இருந்தாலும் இப்படத்தைப் பார்க்கலாம்
3/5