மிஸ்யூ- விமர்சனம்
2K-ஐ குறிவைத்து வந்திருக்கும் மிஸ்யூ ok வாங்குகிறதா?
சினிமாவில் இயக்குநராக போராடும் சித்தார்த்திற்கு ஒரு விபத்து நேர்கிறது..அந்த விபத்து அவர் மனநிலை, மற்றும் வாழும் சூழ்நிலையை டோட்டலாக மாற்றுகிறது. மாறிய சூழலில் ஒரு காதலில் விழுகிறார் சித்தார்த். அந்தக் காதலி யார்? என்பதும், அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களும் தான் படத்தின் கதை
“வயசானாலும் ரொமாண்டிக் ஹீரோ ரொமாண்டிக் ஹீரோ தான்” எனச் சொல்லும்படி சித்தார்த் கவனிக்க வைக்கிறார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஆஷிகா காதல் காட்சிகள் மட்டுமில்லாமல் எல்லாக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். பால சரவணன், மாறன் உள்பட பலரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்
படத்தில் ஜிப்ரான் இசை பெரிதாக உதவவில்லை. பாடல் வரிகளில் மோகன் ராஜா தனித்துவம் காட்ட முயன்றுள்ளார். ‘பார்க்காமல்’ என்ற பாட்டு மட்டும் கவனம் ஈர்க்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதமாக அமைந்துள்ளது. எல்லா ப்ரேமிங்கும் சிறப்பு
வாழ்வில் சிலருக்கு அரிதாக நடக்கும் ஒன்றைக் கதைக்கருவாக எடுத்துள்ளார் இயக்குநர். அதை எல்லோரும் கனெக்ட் செய்யும்படி எமோஷ்னலாகவும், காமெடியாகவும் படமாக்கியுள்ளார். இடைவேளைக்குப் பின் படத்தில் சிற்சில சொதப்பல்கள் இருந்தாலும் படம் Ok ரகமாகவே வந்துள்ளது
3/5