சீன் பை சீன் சுட்டு வைக்கிறது ரீமேக் இல்லை : எடிட்டர் ஆண்டனியின் டைரக்‌ஷன் ‘டச்’

Get real time updates directly on you device, subscribe now.

orunaal

த்தனை அடி வேணும்னாலும் ஷூட் பண்ணிட்டு வந்து குடுங்க… போட வேண்டிய இடத்துல ‘கத்தரி’யை போட்டு, போடக்கூடாத இடங்களை அப்படியே விட்டு அசராம அழகா ஒரு படமாக்கி இயக்குநர்கள் கையில கொடுத்துடுவார் எடிட்டர் ஆண்டனி.

இன்றைய தேதியில் ஷங்கர், கே.வி.ஆனந்த், கெளதம்மேனன், ஏ.எல்.விஜய்ன்னு கோலிவுட்டோட பெரிய பெரிய இயக்குநர்களோட ஆஸ்த்தான ‘எடிட்டர்’ ஆண்டனி தான்.

அவரே பாதி இயக்குநர், அதனால அவரையே முழு இயக்குநராக்கிப் பார்த்தா என்னன்னு ஆசைப்பட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் தனது ‘திங் பிக்’ சார்பில் தயாரித்திருக்கும் படம் தான் ‘ஒருநாள் இரவில்’.

சத்யராஜ், அனுமோள், யூகிசேது, இவங்களோட கல்வித் தந்தை ஐசரி கணேசனின் குடும்ப வாரிசு வருண் மெயின் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

இன்னும் மூணே நாள்ல ரிலீசாகப் போகும் இந்தப் படத்துக்கு முதல்ல ‘நைட் ஷோ’ன்னு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதுதான் இப்போது ‘ஒருநாள் இரவில்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறதாம்.

அதோட இந்தப்படம் மலையாளத்தில் ரிலீசாகி வசூலில் சக்கைப் போடு போட்ட ‘ஷட்டர்’ங்கிற படத்தோட டீமேக் என்பது கூடுதல் விசேஷம். சரி ரீமேக்னா சீன் பை சீன் அப்படியே எடுத்து வைப்பாங்களே? என்றால் அதுதான் இல்லையாம்…

Related Posts
1 of 4

”அப்படியே சீன்களை வைக்க முடியாது. ஏன்னா அங்க உள்ள கல்ச்சருக்கும், நம்ம ஊர் கல்ச்சருக்கும் கொஞ்சமாச்சும் வித்தியாசம் இருக்கும். அந்த வித்தியாசத்தை ரீமேக் செய்யும் போது நாம ஸ்க்ரீன்ல காட்டியே ஆகணும். அதை இந்தப் படத்துல பெர்பெக்ட்டா செஞ்சிருக்கார் என்றார் தயாரிப்பாளர் ஏ.எல்.விஜய்.

”படத்துல ஒரு விலைமாதுவா வர்ற அனுமோள் மலையாலத்துல பீக்ல இருக்கிற நடிகை. ஆக்டிங்க்குக்காக ஏகப்பட்ட அவார்டுகளையும் வாங்கினவங்க… அவங்க இந்தக் கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருந்தாங்க. அதோட ஒரு புதுமுகத்தோட அறிமுகம் இருந்தா பெட்டர்னு பீல் பண்ணினோம். அதனால் அனுமோளை கமிட் பண்ணிட்டோம். சும்மா சொல்லக்கூடாது நடிப்புல பிச்சு ஒதறியிருக்காங்க” என்றார் இயக்குநரான எடிட்டர் ஆண்டனி.

சரி ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் எப்படி?

எல்லா இயக்குநர்களும் எடுத்த படத்தை என்கிட்ட எடிட் செய்ய வர்றப்போ பார்த்துட்டு சில சீன்களைப் பார்த்துட்டு கிண்டல் செய்வேன். இப்போ நானே ஒரு இயக்குநரானப்பத்தான் அவங்களோட கஷ்டம் தெரிய ஆரம்பிச்சது.

முதல்நாள் ஷுட்டிங் நல்ல வெயில், ரெண்டு மணி நேரம் கூட என்னால நிற்க முடியல. மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அப்புறம் போகப் போக சரியாயிடுச்சு. இனிமே எந்த டைரக்டர்களையும் கிண்டல் செய்ய மாட்டேன் என்றார் சிரித்துக் கொண்டே…

கத்தரி போடுறவருக்கே கத்தரி வெயிலா..? : என்னக் கொடுமை ஆண்டனி சார்..?