உடம்பை இரும்பாக்கி செஞ்ச ‘ஈட்டி’ : அடேங்கப்பா… அதர்வா!

Get real time updates directly on you device, subscribe now.

atharva

தைக்குத் தேவையென்றால் உடம்பை உருக்குவது எந்தளவுக்கு கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் அந்த உடம்பை இரும்பு போல இருக்குவது!

கிரிக்கெட்டை போல நோகாமல் நோம்பு கும்பிடுகிற விளையாட்டு அல்ல ‘அத்லெட்டிக்’. அதிகப்பட்ச உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கும். அதன் ட்ரெயினிங் உடம்பே டயர்டாகிப் போகிற அளவுக்கு இருக்கும். அதற்கான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே அந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும்.

கொஞ்சம் விட்டால் நிஜ அதலெட்டிக் வீரராகவே முழுமையாக மாறியிருப்பார் அதர்வா. அந்தளவுக்கு ‘ஈட்டி’ படத்துக்காக அதலெட்டிக் விளையாட்டு வீரர் கேரக்டருக்கு அவர் போட்டிருக்கும் எபோர்ட் அதிகம்.

வெற்றிமாறனின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் ரவி அரசுவின் முதல் படம் தான் ‘ஈட்டி’. அதர்வாவுடன், ஸ்ரீதிவ்யா நடிக்க தனது குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பி.லிட் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறார் மைக்கேல் ராயப்பன்.

இன்னும் சில தினங்களில் ரிலீசுக்குத் தயாராகி விடும் இதில்தான் ஒரு ‘அதலெட்டிக்’ விளையாட்டு வீரராக வருகிறார் அதர்வா.

Related Posts
1 of 12

”அதிகாலையில மூணு மணிக்கு எழுந்திருச்சு 8 மணி வரைக்கும் பயிற்சியை செய்து முடிப்பேன். அதுக்கப்புறம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போய்டுவேன். சாயங்காலம் 6 மணிக்கு ஷூட்டிங் விட்டதும் மறுபடியும் பயிற்சி ஆரம்பிக்கும்” என்கிறார் அதர்வா.

படப்பிடிப்பின் அதலெட்டிக் காட்சிகளை பெங்களூரில் உள்ள ஒரு நிஜமான விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார்கள். என்கூட நடிச்சவங்க எல்லாருமே நிஜமான அதலெட்டிக் விளையாட்டு வீரர்கள் தான். இந்த படத்திற்காக என்னை கடுமையாக உழைக்க வைத்தது பாக் மில்க்ஹா பாக் மில்க்ஹா சிங் ஆக வரும் பர்ஹான் அக்தர் அவர்களின் உண்மையான, கடுமையான உழைப்பு தான்.

ஒவ்வொரு முறையும் பாக் மில்க்ஹா பாக் படத்தை பார்க்கும் போதும் அந்தப்படம் எனக்குள்ள ஒரு வெறியை உண்டாக்கும். அந்த வெறியோடு தான் ஈட்டி படத்துக்காக கடுமையான உடற்பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை நான் கடைப்பிடித்து நடித்தேன் என்கிறார் அதர்வா.

‘ஈட்டி’ படத்துக்காக நடிகர் அதர்வா போட்டுள்ள அர்பணிப்பு சாதாரணமானது அல்ல, கடுமையாக உழைத்து தன்னை வருத்தி படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார் என்பதை படத்தின் ட்ரெய்லரை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் யு-ட்யூப்பில் பார்த்து ரசித்திருப்பதையே அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம்.

”என்னதான் அதலெட்டிக் விளையாட்டை சுத்தி கதை இருந்தாலும் முழுப்படமும் அப்படியிருக்காது. ஒரு விளையாட்டுக் கதையை கமர்ஷியலா கொடுக்கணும்கிறது தான் டைரக்டரோட எண்ணம். அது பிடிச்சதுனால படத்தோட செலவைப் பத்தி யோசிக்கல. தயாரிச்சுட்டேன்.  காமெடி, லவ், செண்டிமெண்ட், ஆக்‌ஷன்ன்னு குடும்பத்தோட பார்த்து ரசிக்கக் கூடிய எல்லா விஷயங்களும் இதுல இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

உண்மையான உழைப்புக்கு பிரம்மாண்ட வெற்றியை மட்டுமல்ல, பல விருதுகளையும் ஒருசேர அள்ளட்டும் இந்த ‘ஈட்டி’!