ஒருநொடி- விமர்சனம்
ஒருநொடியில் நடக்கும் ஒரு பேரதிர்ச்சிகரமான சம்பவத்தை வைத்து கதை செய்துள்ளார் இயக்குநர் மணிவர்மன்.
எம்.எஸ் பாஸ்கருக்கு நிலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை வருகிறது. பிரச்சனைக்கு காரணமான வேல.ராமமூர்த்தியை அவர் சந்திக்கச் செல்கிறார். அப்படிச் சென்றவர் காணாமல் போகிறார். காவல் அதிகாரி தமன்குமார் விசாரிக்கிறார். அந்த விசாரணை நடைபெறும் போதே மற்றொரு சம்பவம் கதையில் நிகழ்கிறது. அந்தச் சம்பவமும் எம்.எஸ் பாஸ்கர் மிஸ்ஸிங்கும் கதையில் எப்படி மிக்ஸ் ஆகிறது என்பதே படத்தின் மீதிக் கதை
நல்ல நடிப்பை வழங்கி தன் கேரக்டருக்கு வலிமை சேர்த்துள்ளார் நாயகன் தமன்குமார். எம்.எஸ் பாஸ்கர் சற்றுநேரமே வந்தாலும் படமெங்கும் இருப்பதை போன்ற தோற்றத்தை இயக்குநர் ஏற்படுத்தியுள்ளார். அருண் சிறப்பான நடிப்பை வழங்க, சலூன் கடைக்காரராக வரும் இளைஞர் பின்னியெடுத்துள்ளார். வேல.ராமமூர்த்தி, பழ கருப்பையா உள்பட படத்தில் நடித்த அனைவரும் எதார்த்தம் மீறாமல் நடித்துள்ளனர்
சஞ்சய் மாணிக்கத்தின் இசையில் பாடல்கள் பேக்ரவுண்ட் ஸ்கோர் இரண்டுமே தரமாக அமைந்துள்ளது. ரதீஷின் ஒளிப்பதிவு படத்தில் தனிப்பதிவாக பேசப்படும். எடிட்டிங்கும் செம்ம ஷார்ப்
வாழ்வில் ஒரு நொடி கூட மிக முக்கியமானது தான் என்பதை வைத்தப் பின்னப்பட்ட திரைக்கதை நொடிக்கு நொடி உற்சாகம் தருகிறது. பார்வையாளர்களின் கவனத்தை ஒரே நேர்கோட்டில் குவித்த வகையில் இந்தப் படம் ஜெயித்துள்ளது
ஒருநொடி- நல்லபடி
3.5/5