பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்”

Get real time updates directly on you device, subscribe now.

vijay-yesydas

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும், அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”.

பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.

கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் “கல்லூரி” அகில், கலையரசன், இயக்குநர் விஜய்பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, “தெய்வம் தந்த வீடு” நிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Related Posts
1 of 11

கடல், ஓ காதல் கண்மணி படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காஞ்சனா 2, நெடுஞ்சாலை படங்களியல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜா இசைமைத்துள்ளார்.

இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள “படைவீரன்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிடுகின்றார்.

தயாரிப்பு – மதிவாணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தனா, இசை – கார்த்திக் ராஜா