அரவிந்த் சாமி படத்தில் போலீஸ் ஆபீசராக களமிறங்கும் சிம்ரன்!

இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் ”மேஜிக் பாக்ஸ் புரொடக்ஷன் நம்பர் 3”.
அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது.
இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர் , நாகி நீடு , ரமேஷ் பண்டிட், OAK. சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் எக்கச்சக்க புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் நடிப்பதால் படத்தின் வியாபாரம் இப்போதிலிருந்தே சூடுபிடித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு “வணங்காமுடி’’ என அனைவரும் கூறி வருகின்றனர் அது தவறான தகவலாகும்.
பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் வெளிவரும்.