பன்னிக்குட்டி படத்தின் வெளியிட்டுச் செய்தி!

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !
தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள், Lyca Productions தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுடன் இணைந்து, யோகி பாபு நடிப்பில் ஆவிகளை கொண்டு உருவாகியுள்ள காமெடி படமான “பன்னிக்குட்டி” படத்தினை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகின்றார்.