பார்த்திபன் வாழ்த்து கூறிய படம் ‘பொண்ணு மாப்பிள்ளை’!

Get real time updates directly on you device, subscribe now.

மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் மகேந்திரனின் ‘ பொண்ணு மாப்பிள்ளை ‘இப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரை தயாரித்திருக்கிறார்கள்.

படத்திற்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் பதினாறும் (Collection)பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் என்று தயாரிப்பாளர்கள் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர். லிங்கதுரையை வாழ்த்தியுள்ளார்.கதாநாயகனாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையட்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.

காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘மகேந்திரனின் பொண்ணு மாப்பிள்ளை’கிராமங்கள் மாறிவிட்டன .கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் காலத்துக்கேற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

இப்படத்தை சேட்டிபாலன் எழுதி இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும் புதுமுகம் ரூபிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, நந்தகுமார் ,ஆர்த்தி ,நெல்லை சிவா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.இயக்குநர் சேட்டிபாலனும் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.