‘இது நம்ம ஆளு’ ஹிட்டு : மாப்பிள்ளை ஆகிறார் சிம்பு!

Get real time updates directly on you device, subscribe now.

simbu1

சிம்பு எப்படியோ தெரியாது. அவருடைய அப்பா டி.ராஜேந்தர் ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களில் ரொம்பவே ஈடுபாடு கொண்டவர்.

படம் துவங்குவதிலிருந்து ஒரு பிரஸ்மீட் வைப்பதென்றால் கூட நல்ல நேரம் பார்த்து தான் வைப்பார்.

ஏற்கனவே நயன் தாரா, ஹன்ஷிகா என அடுத்தடுத்து காதலில் விழுந்து அதில் தோல்வியைத் தழுவிய சிம்பு இப்போது வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்வது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அவர் திருமணத்துக்கு தயாராக இருந்தாலும் சரியான மணப்பெண் அமையாமல் இருந்தது.

Related Posts
1 of 33

இதற்கிடையே பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த சொந்தத் தயாரிப்பான அவரின் இது நம்ம ஆளு திரைப்படம் சென்ற மாதம் ரிலீசானது. கலவையான விமர்சனங்களுடன் ரிலீசான இந்தப்படம் முதலுக்கு மோசமில்லை என்கிற ரேஞ்சில் வசூலைப் பெற்றிருக்கிறதாம்.

படமும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டதால் சந்தோஷத்தில் இருக்கும் டி.ராஜேந்தரிடம் சிம்புவுக்கு இப்போது நேரம் நல்லாயிருக்கு. அதனால அவருக்கு திருமணம் வைத்து விடுவது நல்லது என்று யோசனை சொல்லியிருக்கிறாராம்.

இதனால் இந்த நல்ல நேரத்தை தவற விடாத டி.ஆர் சிம்புவின் சம்மதத்தோடு அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.\

விரைவிலேயே அவருடைய திருமணம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பலாம்.

‘கெட்டவன்’ ‘நல்லவனா’ மாறப்போறார்!