டிசம்பர் கவலைகள்… : மறக்கடிக்க ‘பறந்து’ வாங்க மக்களே…

Get real time updates directly on you device, subscribe now.

paranthu

டிசம்பர் மாதம் வந்தாலே எல்லோர் மனசுக்குள்ளும் ஒருவித பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு கடந்த சில வருடங்களாக டிசம்பரில் கச்சேரிகள் மறைகிற அளவுக்கு கடந்த சில டிசம்பர்களாக தமிழகத்தில் மட்டும் படு பயங்கர அதிர்ச்சிகள்.

சுனாமி, சென்னையை மூழ்கடித்த வெள்ளம், ரூபாய் நோட்டு குளறுபடி, முதல்வர் ஜெ.வின் மறைவு, என்று பல்வேறு அதிர்ச்சிகள் மக்களின் மண்டையை அழுத்தித் தாக்குகிற அளவுக்கு சிக்கலுக்குள்ளாகி கிடக்கிறது தமிழ்நாடு.

இப்படி ஒட்டுமொத்த அழுத்தங்களையும் மறக்கடித்து எங்கே ஒரு சில மணி நேரம் புன்னகைக்க இடம் கிடைக்காதா? என்கிற ஏக்க நிலைக்கு வந்து விட்டார்கள்.

Related Posts
1 of 6

அந்த ஏக்க நிலைக்கு ஆறுதலாகத்தான் நாளை டிசம்பர் 9-ம் தேதி ரிலீசாகிற படம் தான் “பறந்து செல்ல வா” திரைப்படம்.

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இதில் தான் மேற்படி கவலைகளையெல்லாம் மறந்து வயிறு குழுங்க சிரிக்க வைக்க சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி என்கிற மூவர் கூட்டணி.

“தமிழகம் இப்போ ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருக்கு. மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியே தீரணும். ஒரு அற்புதமான தலைவரை இழந்திட்டு தவிக்கிற ஜனங்களுக்கு ஆறுதலா எங்க படம் இருக்கும்” என்கிறார் இப்படத்தின் டைரக்டர் தனபால் பத்மநாபன்.