கொரோனா காலத்தில் போதை வேண்டுமா? -ஐடியா பார்த்திபன்
உலகம் கொரோனா பீதியில் இருக்கும் சமயத்தில் அரசுக்கும் மக்களுக்கும் நல்ல நல்ல ஐடியாக்களைக் கொடுத்து வருகிறார். போதை சம்பந்தப்பட்ட பதிவை ஒன்றை சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார் அதில்,
“இந்த மாதிரியான அசாதாரணமான சூழலில் போர்க்கால அடிப்படையில் இயங்கி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும். மேலும் அரசின் உத்தரவை கடைபிடிக்கும் அத்தனை மக்களுக்கும் என் நன்றிகள். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய நோயில் இருந்து தப்பிப்பதற்காக சாமர்த்தியமாக நடத்தும் சத்தியாகிரகமே இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு.
இந்த 21 நாட்களில் நல்ல விசயங்களைப் பழகினால் அது நம் பழக்கமாக மாறிவிடும். அதுபோல் தீய பழக்கங்களைப் பழகினால் அதுவும் நம் இயல்பாக மாறிவிடும். குறைந்த போதை வேண்டும் என்றால் மது அருந்தலாம். அதுவே அதிக போதை வேண்டும் என்றால் தியானம் செய்யலாம். தியானம் என்பது நம் உள்மனம் நோக்கிய பயணம் தான். இந்த பயணத்தினால் நமக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நம் உடல் மீது கொஞ்சம் அக்கறை காட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.