கடவுள் உள்ளத்தில் இருக்கிறார், தலங்களில் கூட்டம் வேண்டாம்- ஏ.ஆர் ரகுமான்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறி மனித சமூகத்திற்கு எச்சரிக்கையை விடுத்தபடி இருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நிறைய பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் ஏ.ஆர் ரகுமான் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்..

அதில், “தன்னலம் பார்க்காது பொதுநலத்துடன் உலகைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இவர்களைப் பார்க்கும் போது மனம் அன்பால் நிறைகிறது. அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். கடவுள் நம் உள்ளத்தில் தான் இருக்கிறார்.

அவர் இருப்பதற்கு மிகச் சிறந்த இடம் அதுதான். அதனால் இது போன்ற அசாதாரணமான சூழலில் மத வழிபாட்டுத் தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கம் உத்தரவிடும் வழிமுறைகளைக் கடைபிடித்து நம்மை நாம் காத்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை கடைபிடிக்கும் நேரம் இது. மேலும் நம்மிடம் இருக்கும் மனிதம் ஆன்மிகம் இரண்டு செயல் வடிவம் பெற வேண்டிய தருணமும் இது தான்.” என்று பதிவிட்டுள்ளார்.