அஜித் தான் அப்படி…விஜய்யுமா?

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழ்திரையுலகில் முதல் குரல் விஜய் குரலாகத்தான் இருக்கும். இப்படித்தான் அவரைச் சொல்கிறார்கள். ஜி.எஸ்.டி விவகாரம், நீட் தேர்வினால் பலியான அனிதா வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது என விஜய் காத்திரமான பதிவைச் செய்து வந்திருக்கிறார். ஆனால் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதன் தாக்கம் எளிய மக்களின் வாழ்வாதரத்தை மிகவும் பாதித்துள்ளது. முக்கியகாக சினிமாவில் அன்றாட கூலிகளாக இருக்கும் பெப்ஸி தொழிலார்களுக்கும் இந்தப்பாதிப்பு இருக்கிறது. அதை உணர்ந்து சூர்யா ரஜினி சிவகார்த்திகேயன் நயன்தாரா உள்ளிட்ட பலர் அவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

Related Posts
1 of 14

மேலும் கொரோனா நிவாரணம் அரசுக்கும் பல நடிகர்கள் கொடுத்து வருகிறார்கள். ஆனால் விஜய் இதுவரைக்கும் வாய் கை இரண்டையும் திறக்கவே இல்லை. அஜித்தாவது எப்போதும் எதற்கும் வெளியில் வராதவர். இப்போது இந்த விசயத்தில் விஜய்யும் இப்படி இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறைந்த பட்சம் மாஸ்டர் பட லெரிக் விட்ட நேரத்துல ஒரு விழிப்புணர்வு வீடியோவாவது விட்டிருக்கலாமே தளபதி?