பட்டத்து அரசன்- விமர்சனம்
அரசனை நம்பி ரசிகனை கைவிட்டார் சற்குணம்
தஞ்சை மாவட்டத்தை பின்புலமாக வைத்து சற்குணம் கதை எழுதினால் அது பொற்குடம் தான் என்ற நினைப்பில் குடம் குடமாக பாலை ஊற்றி விட்டார் மனிதர்
தொட்டால் வெடிக்கும் அதர்வா போன்ற இளம் ஹீரோவையும், நின்றால் களம் தீப்பிடிக்கும் ஹீரோ ராஜ்கிரணையும் வைத்து அட்டகாசமான கபடி ஆடியிருக்கலாம்.
சரி அரசனின் கதை என்ன?
கோத்தேரி எனும் மாபெரும் கபடி வீரரான ராஜ்கிரணின் இளையதாரத்தின் மகன் ஆர்.கே சுரேஷ். அவர் ஒரு கபடி விளையாட்டால் இறந்து விட, அவரின் மகன் அதர்வாவை தாத்தா ராஜ்கிரணிடமிருந்து பிரித்து வருகிறார் ஆர்.கே சுரேஷின் மனைவி ராதிகா. கபடியால் பிரிந்த தாத்தாவும் பேரனும் கபடியாலே ஒன்று சேரும் வாய்ப்பு வர, அந்த வாய்ப்பை ஹீரோ டீமும், வில்லன் டீமும் எப்படி பயன்படுத்துகிறது? என்பதே பட்டத்து அரசனின் கதை
முனை மழுங்காத நடிப்பை அதர்வா வழங்கினாலும் அவரின் கேரக்டர் வார்ப்பு படுவீக்காக இருக்கிறது. ராஜ்கிரண் கேரக்டருக்கும் அதே நிலை தான். அதர்வா தம்பியாக நடித்துள்ள ராஜ் ஐயப்பா நடிப்பும் கேரக்டரும் சிறப்பாக அமைந்துள்ளது
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை சுற்றலில் விடுகிறது. ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தி.
நம்மை காப்பிடித்துக் கொண்டு போக வேண்டிய திரைக்கதை, துண்டு துண்டாக பிரிந்து எங்கங்கோ சிதறி நம்மை பதற வைக்கிறது. துளியும் ஈர்க்காத இந்த பட்டத்து அரசனுக்கு…வேறு என்ன சொல்வது?
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
2/5
#PattathuArasan