டிசம்பர் 9-ம் தேதி ‘பேட்ட’ பாடல்கள் பராக்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பிரம்மாண்டப் படமான ‘2 பாயிண்ட் ஓ’ படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வருகிறது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ‘பேட்ட’.
2019 பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் முதன் முறையாக இந்த ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பொங்கல் வெளியீடு அறிவிப்பு ஆகிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே இப்படத்தின் ஆடியோ எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது.
அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 3-ம் தேதியும், இரண்டாவது சிங்கிள் ட்ராக் டிசம்பர் 7-ம் தேதியும், அனைத்துப் பாடல்களும் டிசம்பர் 9-ம் தேதியும் வெளியாகிறது.
டிசம்பர் 12-ம் தேதி பேட்ட படத்தின் டீசரை வெளியிடவும் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.