கெடைச்சது ஒரு சான்ஸ், இப்போ அதுவும் போச்சா..? : அய்யோ பாவம் அனிருத்

Get real time updates directly on you device, subscribe now.

aniruth2

ரே ஒரு ‘பீப் சாங்’ இவ்வளவு தூரத்துக்கு இம்சையைக் கொடுக்கும் என்று அனிருத் நினைத்துப் பார்க்கவே இல்லை.

எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த சம்பந்தமும் ஸ்டேட்மெண்ட் விட்டும் பார்த்தார், காவல் நிலையத்துக்கு நேரடியாகவும் வந்து சொல்லிப் பார்த்தார். ஆனால் யாருமே அவர் சொல்வதை நம்பத் தயாராக இல்லை.

விவகாரம் கோர்ட், கேஸ் என்று போக கனடாவுக்கு இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றவர் சுமார் ஒருமாதகாலம் அங்கேயே செட்டிலாகியிருந்தார்.

அந்த ‘தங்கல்’ தான் இப்போது அனிருத்தின் கேரியருக்கு தடங்கலாக அமைந்து விட்டது.

விசாரணை, கைது ஆகியவற்றுக்குப் பயந்து கனடாவிலேயே நீண்ட நாட்கள் இருந்ததால் அவரை தங்களது படங்களில் இசையமைப்பாளராக கமிட் செய்த பல இயக்குநர்கள் இந்த பீப் பாடல் சர்ச்சை காரணமாக தங்கள் படங்களிலிருந்து நீக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Related Posts
1 of 44

முதலில் அவரை யார் சினிமாவில் அறிமுகப்படுத்தினாரோ அதே தனுஷ் தான் தனது கொடி படத்திலிருந்து நீக்கி விட்டு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக கமிட் செய்தார். இப்படியே சுமார் அரை டஜன் படங்கள் தமிழில் அனிருத்தின் கையை விட்டுப் போயிருக்கின்றன.

தமிழில் இப்படி என்றால் இப்போது தெலுங்கிலும் அதே நிலைமை தான் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நிதின், சமந்தா நடித்து வரும் ‘அ ஆ’ என்ற படத்தில் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்ட அனிருத் இப்போது அந்தப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்

ஓரு குறிப்பிட்ட தேதியின் படத்துக்கு ஒரு பாடலை அனிருத்திடம் கேட்டுப் பார்த்தாராம் இயக்குநர் த்ரி விக்ரம். அனிருத்தோ முடியாது என்று சொல்லி விட்டதால் அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரை கமிட் செய்திருக்கிறார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டின் இசை நாயகனாக இருந்த அனிருத் கைவசம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது.

யாரோ செஞ்ச குசும்புக்கு அனிருத் என்ன செய்வார்? அய்யோ பாவம் அந்த பச்சப்புள்ள…