போர்- விமர்சனம்

Por ah இருக்கா? Bore ah இருக்கா? ரெண்டும் இருக்கு
கஞ்சா குடிக்கிகளும், அட்டுப் பொறுக்கிகளும் உலாத்தும் ஒரு கல்லூரி. ஹீரோஸ் காளிதாஸ் அர்ஜுன் தாஸ் இருவரும் முட்டிக்கொள்ளும் சூழல் வருகிறது. அதற்கான பில்டப் எல்லாம் படமெங்கும் கொடுக்கப்படுகிறது. இவர்களின் போருக்கான காரணம் என்ன? என்பது ஒரு கதை. மேலும் கல்லூரியில் சில பெண்கள் புரட்சி பிறட்சி எனச் சுற்றுகிறார்கள் அவர்களுக்கு ஒரு கதை. இந்த இரண்டு கதைகளையும் சரியான திரைக்கதையாக்காமல் நம்மை குழப்பயடித்துள்ளார் இயக்குநர் பிஜாய் நம்பியார்
அர்ஜுன் தாஸ் மொடாக்குடியும் முரட்டு லவ்வுமாக சுற்றுகிறார். காளிதாஸ் காதல் உருட்டும், காதல் திருட்டும் செய்து திரிகிறார். இருவருக்கும் நன்றாக நடிப்பதற்கான வெளி கதையில் இல்லை. T.J.பானு, சஞ்சனா உள்ளிட்ட லேடிஸ் டிப்பார்ட்மெண்ட் ஒகே ரகம்
பின்னணி இசை பாடல்கள் எல்லாம் ஓகே ரகமே. ஒளிப்பதிவு மிகத்தரமாக அமைந்துள்ளது. ப்ரோடக்ஷன் வேல்யூ வேறலெவல். எல்லா ப்ரேம்களிலும் பணத்தை வாரியிறைத்துள்ளார் தயாரிப்பாளர்.
எப்ப எடுத்தாலும் ஹிட் அடிக்கிற ஒன்லைன் இது. ஆனால் அதையே தன் இஷ்டத்திற்கு வளைத்து, ஒழப்பி சொதப்பிவிட்டார் இயக்குநர். பெரும் போர் நிகழும் என நம்பினால் கடைசியில் அக்கப்போராக முடிந்துவிட்டது படம்
2/5