அதிரடியில் மிரட்டும் நானியின்”தசரா” திரைப்பட டீசர்!
உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் “தசரா” அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை, இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது தசரா டிரெய்லர்.
இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்துகிறது.“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.