உலக புகழ் பெற்ற காவியத்தோடு வரும் ”திருமணம் எனும் நிக்காஹ்” இயக்குநர் அனீஸ் !

Get real time updates directly on you device, subscribe now.

anish

னைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ என்ற அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ்.

Related Posts
1 of 134

இதைதொடர்ந்து தன்னுடைய அடுத்த கதையை தயார் செய்ய இரண்டு வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். “ உலக புகழ்பெற்ற காவியத்தையும் , இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம் தான் அவரது இரண்டாவது திரைப்படமாக வர இருக்கிறது.

புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் மிகவும் பிரபலமான ‘லூசியா’ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு என். ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். பர்பிள் பிரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான மற்ற நடிகர் , நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.