1000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகும் பரத்தின் ‘பொட்டு’
‘மைனா’, ‘சாட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் தான் ‘பொட்டு’.
பரத் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வடிவுடையான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படம் பரத் நடித்த படங்களிலேயே முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் இப்படம் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நேரடியாக தமிழில் வெளியாகிறது.
மருத்துவக் கல்லூரி பின்னணியில் தயாராகியுள்ள படு பயங்கரமான இந்த ஹாரர் படத்தில் முதன்முறையாக பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பாக நடித்துள்ளார். ஹாரர் படமென்றாலும் இப்படத்தை குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்” என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.