கேக்கோடு வந்த ரசிகர்கள் ; பிறந்தநாளை கொண்டாட மறுத்த பிரபுதேவா : என்ன காரணம்?

Get real time updates directly on you device, subscribe now.

praabhudeva1

நேற்று மார்ச் 3 ஆம் தேதி நடனப்புயலும், நடிகருமான பிரபு தேவாவின் பிறந்த நாள்.

இந்த வருடம் தனது பிறந்த நாளில் பிரபுதேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்- கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் “யங் மங் சங்”படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார்.

IMG_20170403_141448 (1)

அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப்பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், தனது பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லி விட்டார் பிரபுதேவா.