பொறுப்பற்ற மக்கள் பிரகாஷ்ராஜ் கோபம்

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதாபிமான மனிதர் என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறார். சமீபத்தில் பெப்ஸி ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தற்போது அரசின் உத்தரவை அலட்சியம் செய்து ரோட்டில் சுற்றுபவர்களை கடுமையாக சாடி இருக்கிறார்.

”கொரோனா ஏன் பரவுகிறது என்று பலரும் பல யூகங்களைக் கூறினாலும் கூட, அது பரவுவதற்கு ஒரே காரணம் தான் இருக்கிறது. அரசின் உத்தரவை அலட்சியப்படுத்துவிட்டு வீட்டிற்குள் தனிமையைக் கடைபிடிக்காமல் தெருவில் இறங்கி ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பொறுப்பற்ற மக்களால் தான் கொரோனா கட்டுபாடின்றி பரவுகிறது” என்று ஆக்ரோசத்துடன் கூறி இருக்கிறார்