ஒரு மாதத்துக்கு முன்பே ஆரம்பமான ‘தெறி’ ரிசர்வேஷன்! : விஜய் ரசிகர்கள் குஷி
விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
அப்படிப்பட்டவர்களுக்கு படத்தின் ரிசர்வேஷனே ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கிறது என்றால் அந்த சந்தோஷத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா என்ன?
‘புலி’ படத்துக்குப் பிறகு வரும் படமென்பதால் ‘தெறி’ படத்துக்கு விஜய் ரசிகர்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனாலேயே ‘தெறி’ படத்தின் டீஸர் யு-ட்யூப்பில் இமாலய சாதனை படைத்தது.
தேர்தல் வருவதால் ‘தெறி’ படம் வராது என்று தான் சென்ற வாரம் வரை செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆடியோ ரிலீஸ் வருகிற 20-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி கண்டிப்பாக தெறி ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சில தினங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இப்போது அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமான சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் ‘தெறி’ படத்துக்கான முன்பதிவு இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகபட்சம் ஒரு வாரத்துக்கு முன்பு தான் ரிசர்வேஷன் ஆரம்பமாகும். ஆனால் விஜய்யின் ‘தெறி’ படத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ரிசர்வேஷன் ஆரம்பமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதாலும், அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்க வேண்டும் என்கிற காரணத்தினாலும் எஸ்பிஐ சினிமாஸ் இந்த முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் இதுவும் விஜய் ரசிகர்களுக்கு குஷியான செய்தி தான்!