நேரம் நல்லாயிருக்கு..! : விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!
‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் வரை விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலவரம் கொஞ்சம் கலவரமாகவே இருந்தது.
என்றைக்கு ‘நானும் ரவுடி தான்’ படம் ரிலீசானதோ அன்றைக்கே அவரது மார்க்கெட் ஸ்டெடியாக ஆரம்பித்து விட்டது.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கைவசம் அரை டஜன் படங்களுக்கும் மேல் கால்ஷூட் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.
எல்லாமே ரசிகர்களுக்கு வித்தியாசமான ரசனை அனுபவத்தை தரக்கூடிய படங்கள் என்பது தான் அதில் குறிப்பிட வேண்டிய விஷயம்.
இதனால் அடுத்த ரவுண்ட்டுக்கு தயாரான விஜய் சேதுபதிக்கு அவரது மார்க்கெட்டை இன்னும் ஸ்டெடியாக்குவது போல வந்திருக்கிறது சென்ற வெள்ளிக்கிழமை ரிலீசான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் வசூல் ரிப்போர்ட்!
அந்த வகையில் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7.5 கோடி ரூபாயை வசூலித்து விஜய் சேதுபதியின் முந்தைய படங்களான ‘சூது கவ்வும்’, ‘நானும் ரவுடி தான்’ படங்களின் வசூல் சாதனைகளை அசால்ட்டாக முறியடித்திருக்கிறதாம்.
நேரம் நல்லாயிருக்கு..! அப்புறம் என்ன பாஸ்? கலக்குங்க…