மீண்டும் திருமணத்தை தள்ளிப் போட்ட ப்ரியாமணி!

Get real time updates directly on you device, subscribe now.

priyamani

32 வயதாகும் ப்ரியாமணி சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்ததால் பல ஆண்டுகளாக காதலித்து வந்த பாய் ப்ரெண்ட்டை திருமணம் செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்.

அப்படி அறிவித்த நேரமோ என்னமோ தெரியவில்லை. அதுவரை ப்ரியாமணிக்கு வராத வாய்ப்பு இப்போது தானாக தேடி வந்திருக்கிறது. அதிலும் தமிழில் என்பது தான் ஹைலைட்.

மலையாளத்தில் மம்முட்டி – நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘புதிய நியமம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலை நடந்து வருகிறது. சமூகத்துக்குத் தேவையான விழிப்பு உணர்வுடன் கூடிய பழிவாங்கல் கதையான இந்தப் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் பேசப்படுமாம். அப்படிப்பட்ட கதாநாயகி கேரக்டரில் நடிக்கத்தான் ப்ரியாமணிக்கு அழைப்பு வந்திருக்கிறது.

ஹீரோ கேரக்டரில் நடிக்க தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று குடும்ப ஜோசியர் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்ட ப்ரியாமணி இப்போது இந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பிறகு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.