அஜித், தனுஷ் மீது ஜி.வி பிரகாஷ் கடும் தாக்கு! : விடிய விடிய கழுவி ஊற்றிய ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

gvp

‘கிரீடம்’ படத்துக்குப் பிறகு அஜித் படங்களுக்கு இசையமைக்கவில்லை ஜி.வி பிரகாஷ். ஆனால் விஜய் நடித்த ‘தலைவா’, ‘தெறி’ என தொடர்ந்து இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். இதனால் ஜி.வி பிரகாஷ் விஜய் ஆதரவாளர் என்கிற எண்ணத்தில் அவரை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கலாய்த்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

சென்ற வாரம் ரிலீசான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜிவியின் நடிப்பையும், தோற்றத்தையும் கிண்டல், கேலி செய்யத் தொடங்கிய அஜித் ரசிகர்கள் அவரது இசையைப் பற்றியும் கடுமையாக தாக்கி கருத்துகளை பரப்பி வருகிறார்கள்.

”சமீபகாலமாக உங்களை அதிகம் கடுப்படிக்கும் பிரபலத்தின் முகம் எது?” என்றெல்லாம் கருத்துக் கணிப்பு நடத்தில் அதில் ஜி.வி பிரகாஷை முதலிடத்தில் கொண்டு வந்து நக்கல் செய்தனர். ஆரம்பத்தில் இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்து வந்த ஜி.வி.பிரகாஷ் நேற்று அஜித் ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

அந்த வாக்குவாதத்தில் ‘அஜித் ஒரு ஆமை’ என்று வெளிப்படையாகவே அஜித்தை தாக்கி கருத்து சொல்லவும் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். வண்டை வண்டையாக பதிலடி கொடுத்தார்கள். இப்படி அஜித் ரசிகர்களிடம் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ‘தனுஷை விட்டு பிரிந்து வந்த பிறகு தான் நான் ஹீரோ ஆனேன்” என்று அவரையும் வம்புக்கிழுக்க, நேற்று முழுவதும் அஜித், தனுஷ் ரசிகர்களிடம் வகையாக மாட்டிக் கொண்டார் ஜி.வி.

Related Posts
1 of 89

ட்விட்டரில் ஒரு பிரபலம் கிடைத்தால் சும்மாவே ஓட்டுகிற ரசிகர்கள் ஜி.வி தானாக வந்து வலையில் விழவும் நேற்று முழுவதும் ஜி.வியை எவ்வளவு தூரத்துக்கு கழுவி ஊற்ற முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு கழுவி ஊற்றி விட்டார்கள் அஜித், தனுஷ் ரசிகர்கள்.

இதனால் நொந்து போன ஜி.வி அஜித், மற்றும் தனுஷைப் பற்றி தான் போட்ட நெகட்டீவ் கமெண்ட்டுகளை மட்டும் நீக்கி விட்டார்.

அப்படியும் விடாத அஜித்- தனுஷ் ரசிகர்கள் #FrustratedPsychoGvPrakash #பொட்டைVijayFansசில்றGvp என்றெல்லாம் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி விடிய விடிய கிழித்து தொங்க விட்டு விட்டார்கள்.

இவ்வளவு நடந்தும் விஜய் ரசிகர்களில் ஒருவர் கூட ஜி.விக்கு ஆதரவாக வராதது குறிப்பிடத்தக்கது.