சூர்யாவிற்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு

Get real time updates directly on you device, subscribe now.


ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது. கொரோனா தாக்குதலால் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் இப்படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் வெளியிட இருக்கிறது. இதற்கு திரையுலகில் நிறைய எதிர்ப்பு வந்தாலும் ஒருபுறம் மாற்றத்தை ஏற்றுத்தானே ஆகணும் என்ற குரல்களும் கேட்கின்றன. தயாரிப்பாளர் தாணு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

Related Posts
1 of 23

“OTT ப்ளாட் பாரத்தில் படம் வெளியாவதால் தியேட்டர்களுக்கு பிரச்சனை என்று பயப்பட தேவையில்லை. டிவி வந்த போதும் இப்படித் தான் தியேட்டர்கள் அழிந்து விடும் என்றார்கள். அதற்குப் பிறகு தான் நாம் அதிகமாக வளர்ந்தோம். சூர்யா குடும்பம் கல்விக்கு நிறைய செய்து வருகிறார்கள். இந்தப்படத்தை அவர்கள் OTT-யில் வெளியிடுவதில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர்கள் எதாவது நல்லது தான் செய்வார்கள். அதனால் இதை நாம் தடை செய்ய வேண்டாம்” என்று சொன்னதோடு மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்