‘புலி’ன்னா சும்மாவா..? – விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்

Get real time updates directly on you device, subscribe now.

Puli

இளைய தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை பாடினார்.

அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை தொடர்ந்து தான் நடித்த அடுத்தடுத்த படங்களான தலைவா, ஜில்லா, கத்தி ஆகிய படங்களிலும் நடிகர் விஜய் தொடர்ந்து தனது சொந்த குரலில் பாடினார்.

கூகுள் கூகுள் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, கண்டாங்கி கண்டாங்கி செல்ஃபி புள்ள ஆகிய நான்கு மாபெரும் ஹிட் பாடல்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்போடு விரைவில் வெளியாக இருக்கும் ‘புலி’ திரைப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

Related Posts
1 of 77

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் திரையில் நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் சுருதிஹாசனும் அவருடன் சேர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

ப்ளாக் அண்ட் வைட் காலகட்டத்திற்கு பிறகு நாயகன் நாயகி இருவருமே பின்னணி பாடலை பாடி திரையில் நடித்தும் இருப்பது ஒரு மைல்கல் ஆதலால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது திரை உலகத்தினர் மத்தியிலும் இந்நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னே விஜய் படம்னா சும்மாவா..?