இதுதான் ‘புலி’ படத்தோட கதையாம்! : உஷ்… அப்பாடா முடியல…

Get real time updates directly on you device, subscribe now.

puli-vijay

மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் படம் ஆரம்பித்த கையோடு கூடவே ஆளாளுக்கு அந்தப் படத்தின் கதை எப்படிப்பட்டது என்று எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் இதில் சிக்கிக் கொள்ளும். அப்படித்தான் இப்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புலி படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் உலாவந்து கொண்டிருக்கிறது.

ஹீரோவான விஜய், ‘அட்டகத்தி’ நந்திதா மீது காதல் கொள்கிறார், அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி கொண்டு செல்ல அவரை காப்பாற்ற செல்லும் விஜய்க்கு நந்திதா பிணமாக கிடைக்கிறார். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறாராம் விஜய். அப்போது மலையிலிருந்து விழும் விஜய் ஒரு அரண்மனை வாசலில் விழுகிறார். அங்கே எப்படி வந்தோம் என்று தெரியாமல் குழப்பத்திலிருக்கிறார்.

Related Posts
1 of 77

அந்த நாட்டு மலைவாசிகளுடன் சேர்ந்து வாழும் விஜய், நாட்டின் மகாராணியாக இருக்கும் ஸ்ரீதேவியிடம் சிப்பாயாக பணிபுரிகிறார். அவ்வப்போது வரும் எதிரிகளிடமிருந்து விஜய் நாட்டை காப்பாற்ற, மக்களிடையே விஜய்யின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

இதில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது காதல் வயப்படுகிறார். இது தெரியாமல் நடிகை ஹன்சிகா விஜய்யை காதலிக்கிறார். மக்களிடையே செல்வாக்கு அதிகமாகும் விஜய்யை பார்த்து பொறாமைப்படுகிறார் சுதீப். இதனால் விஜய்யை கொன்று அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அப்போது விஜய்யை அடித்து மகாராணியிடம் தேசத்துரோகியாக காட்டுகிறார் சுதீப்.

இதில் ஸ்ரீதேவியிடம் இருக்கும் ஒருவிதமான சக்தி மூலம் ஒருவரின் பழைய கால நினைவுகளை பார்க்க முடியும், அதன் மூலம் ஸ்ரீதேவி விஜய்யின் தலை மீது கை வைத்து அவரின் பழைய நினைவுகளை பார்க்கிறார்.அப்போது அவர் காணாமல் போன தன் மகன் என்பது தெரிய வருகிறது. அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களே கதை என ஒரு கதை சுற்றி வருகின்றது.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… ஸ்… அப்பாடா முடியல…