காமெடி டைட்டில் ‘கபாலி’ : கடுப்பில் ரஜினி ரசிகர்கள்!
ரஜினி படங்களின் டைட்டில்கள் என்றாலே அதில் ஒரு உயிர்ப்பு இருக்கும். உச்சரிக்கும் போது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இருக்காது.
வீரா, அண்ணாமலை, அருணாச்சலம், முத்து, படையப்பா என ரஜினி பட டைட்டில்களை வரிசைப்படுத்தினால் இந்த உண்மை புரியும்.
ஆனால் ரஜினியின் புதுப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வைத்திருக்கும் கபாலி டைட்டில் ரஜினி ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியிருக்கிறது.
கபாலீஸ்வரன் என்ற பெயரின் சுருக்கம் தான் கபாலி என்றாலும், அது லூஸ் மோகனில் ஆரம்பித்து வடிவேலு வரை பல படங்களில் காமெடி நடிகர்களுக்கு வைக்கப்பட்டு ரசிகர்கள் சிரிப்பாய் சிரித்த பெயர்.
அப்படிப்பட்ட பெயரை சூப்பர் ஸ்டாரான ரஜினி படத்துக்கு வைத்து விட்டாரே இயக்குநர் ரஞ்சித் என்பது தான் ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய மனக்குறை.
மேலும் கபாலி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு சிறு பட்ஜெட் படம் தயாராகி வருவதால் இந்த டைட்டிலை வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எது எப்படியோ ரஜினி ரசிகர்களுக்கே பிடிக்காத இந்த டைட்டிலை மாற்றினால் தான் என்ன..?
மாத்திடுங்களேன் ரஞ்சித்