பப்பி- விமர்சனம்

ஒரு உயிரோட வேல்யூ என்ன தெரியுமா? அது ரொம்ப பெருசு! இந்த ஒரு மெசேஜ் தான் பப்பி படம். ஆனால் கடைசில் வரும் அந்த மெசேஜ் சம்பந்தப்பட்ட காட்சிக்காக படம் முழுதும் நம்மை வச்சி செய்துள்ளார் இயக்குநர் முரட்டு சிங்கிள். க்ளாஸ் ரூமில் வைத்து பிட்டுப்படம் பார்ப்பதை பெருமையான காட்சியாக வைப்பதெல்லாம் வேறலெவல் சிந்தனை பாஸ்.

வருண் பல இடங்களில் நடிப்பு வரும்…ஆனா வராது என்ற ரேஞ்சிலே பர்ஃபாமன்ஸ் செய்கிறார். கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல் படுத்துகிறார் யோகிபாபு. உருவக கேலியை இவர் எப்ப தான் போகில போட்டு கொளுத்துவாரோ தெரியவில்லை.

Related Posts
1 of 2,031

ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டே ஓரளவு நடித்துள்ளார். படம் சிறியதாக இருந்தாலும் பாடல்கள் படத்தில் பெரிய லிஸ்டாக இருந்து கடுப்பேத்துகிறது. ஒரு குறும்படத்திற்கான கண்டெண்டை வைத்து அதை பெரும்படமாக ஆக்க படாதபாடு பட்டுள்ளார் இயக்குநர். அதனால் படம் கதையாக நகராமல் வெறும் காட்சிகளாகவே நகர்கிறது. அதில் ஒருசில காட்சிகள் தேறினாலும் படத்தின் ப்ளோவில் அது நிக்கவில்லை. சின்ன வயதில்
திருமணத்திற்கு முன் உறவு என்பது எவ்வளவு பிரச்சனைகளை கொண்டு வரும் என்பதை மிக எதார்த்தமாகப் பேசி இருக்கும் ஒரு மருத்துவமனை காட்சி உருப்படியாக இருந்தது.

பாடல்கள் பின்னணி இசை இரண்டும் பெரிதாக சோபிக்கவும் இல்லை சோதிக்கவும் இல்லை. இதையே படத்திற்கும் சொல்லலாம். கேமராமேன் சின்னபடம் கேமராவில் காட்டாமல் கடுமையாக உழைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க விடலைப்பசங்களை மனதில் கொண்டு இயக்குநர் முரட்டு சிங்கிள் மனநிலையோடு ஸ்கிரிப்ட் எழுதி இருக்கிறார். அதை சிறந்த திரைக்கதையாக எழுதி இருந்தால் கடைசியில் படம் சொல்ல வரும் மெசேஜ் மனதில் நின்றிருக்கும்.

2.5/5