‘கபாலி’ டீஸரை கொண்டாடி மகிழ்ந்த ரம் படக்குழுவினர்!

உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரும் கபாலி படப்பாடலான ‘நெருப்புடா’ பாடலை ரம் திரைப்படக் குழுவினரும் விட்டு வைக்கவில்லை.
ரிஷிகேஷ், அஞ்சாதே’ நரேன், விவேக், மியா, சஞ்சிதா ஷெட்டி, அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக குவியலே நடித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு சென்ற வியாழன் அன்று நடந்தது.
இடைவிடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு இருந்தாலும், படப்பிடிப்பு நன்றாக முடிந்து, படமும் நன்றாக வந்து இருக்கிறது என்கிற உற்சாகம் இந்த இளம் படப்பிடிப்புக்கு குழுவினருக்கு இருந்ததால் அதை கொண்டாட விரும்பினார்.
விவேக் சார் இருக்குமிடத்தில் ஐடியாவுக்கா பஞ்சம்? ஊரே கொண்டாடி மகிழும் ‘கபாலி’ டீசரை நாமும் பார்த்து கொண்டாடலாம் என்றார். இந்த ஐடியா நெருப்பு போல் கொண்டது. படப்பிடிப்பு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவும் உடனடியாக ஒரு பெரிய ஸ்க்ரீன் ஏற்பாடு செய்து ‘கபாலி’ டீசர் பார்க்க ஏற்பாடு செய்தார்.
இதை பார்த்தவுடன் படப்பிடிப்பை துரிதக் காலத்தில் முடித்த மகிழ்ச்சி மேலோங்க உற்சாக குரல் எழுப்பி ‘ரம்’ படப்பிடிப்பு குழுவினர் ‘கபாலி’ டீசருக்கு வரவேற்புக்கு கொடுத்தனர்.