‘புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.
டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.