“பிரம்மாஸ்த்ரா பாகம் – 1”உடைய போஸ்டர் வெளியிடு

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 5

மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இத்திரைப்படம் 09.09.2022 அன்று – இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பான “பிரம்மாஸ்த்ரா” வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிப்லிப்பை ஒருங்கினைத்த திரை காவியமாக தரவுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.